ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் கதாநாயகியாக தமன்னா, கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஒன்று அவரது காதல் விவகாரம், அடுத்தது சமீபத்தில் வெளியான வெப் தொடரான 'ஜீ கர்தா'வில் அவரது தாராளா நடிப்பு, மற்றுமொன்று விரைவில் வெளியாக உள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் தொடரிலும் அவரது நெருக்கமான நடிப்பு. இந்த வெப் தொடரில் அவரது காதலர் விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
'ஜீ கர்தா' வெப் தொடரில் தமன்னா தாராளமாக நடித்த காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' தொடரை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனமும் தமன்னா - விஜய் வர்மாவை வைத்து நெருக்கமான போட்டோஷூட் எடுத்து அதையும் புரமோஷன் செய்து வருகிறது. “இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் ? காதலா அல்லது காமமா” என்று அந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்கள். விஜய் என்பது தமன்னாவின் காதலர் பெயரையும் குறிப்பிடும். விஜய் என்றால் ஹிந்தியில் வெற்றி என்றும் அர்த்தம். இப்படி இரு பொருள்பட பதிவிட்டுள்ளார்கள்.
தமன்னாவிற்கு இத்தனை ஆண்டு கால சினிமாவில் கிடைக்காத ஒரு பரபரப்பு அவர் நடித்துள்ள இந்த இரண்டு தொடர்களில் கிடைத்துள்ளது.