சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? | ஜனநாயகன் டிரைலர் நாளை(ஜன., 3) வெளியீடு | புத்தாண்டை முன்னிட்டு எத்தனை படங்களின் அப்டேட் வந்தது தெரியுமா ? | தியேட்டர்களை எதிர்த்து ஓடிடியில் வெளியான 'சல்லியர்கள்' | தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், கிர்த்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. செப்டம்பர் 18ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என மே மாதமே அறிவித்துவிட்டார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக இப்படம் தள்ளி வைக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகின. அடுத்த வருடத்திற்கே தள்ளி வைத்துவிட்டார்கள் என்று கூட சிலர் பேசி வருகிறார்கள்.
இதனிடையே, இந்தப் பட வெளியீட்டிற்கு இசையமைப்பாளர் அனிருத் ஒரு காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது. படத்தின் பின்னணி இசையை விரைந்து முடிக்க முடியாது என அவர் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் வேறு வழியின்றி படக்குழு சம்மதம் சொல்லிவிட்டதாம்.
தீபாவளியை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' படம் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை வெளியிடலாம் என்று பிரதீப்பும் சொல்கிறாராம். இது அடுத்து ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் போய் நிற்கப் போகிறதா அல்லது சுமூகமாக போவார்களா என்பது விரைவில் தெரிய வரும்.