இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
வடிவேலு, பஹத் பாசில் நடித்த ‛மாரீசன்' படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ஆனாலும், படம் குறித்து இன்று வரை வடிவேலு பேசவில்லை. மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கவில்லை. வழக்கமாக நடக்கும் டீசர், பாடல்கள் வெளியீட்டு விழா, பிரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்படவில்லை. வடிவேலுக்கு என்னாச்சு, இந்த படம் மீது ஆர்வம் இல்லாமல் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பப்ளிசிட்டி விஷயத்தில் பஹத்பாசில் இன்னொரு அஜித். தமிழில் அவர் பல படங்களில் நடித்து இருந்தாலும், பட நிகழ்ச்சிகளுக்கு வந்தது இல்லை. ரஜினியின் வேட்டையன் படத்துக்கே வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். அந்த பழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது. அவர் மாரீசனின் 2வது ஹீரோ என்றாலும் படம் குறித்து பேசவில்லை. கேங்கர்ஸ் படத்துக்காக வடிவேலு பேசினார், பட நிகழ்ச்சிகளுக்கு வந்தார். படம் பெரியளவில் ஹிட்டாகவில்லை. அதனால், இந்த படத்துக்கு அமைதியாக இருப்போம் என முடிவெடுத்து விட்டாரோ என்னவோ?