'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்தபடியாக பார்த்திபன் ‛டீன்' என்ற பெயரில் 13 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் சம்பந்தப்பட்ட கதையில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்திற்கு இசையமைக்க அவர் ஏ. ஆர். ரகுமானை தொடர்பு கொண்டபோது, தற்போது வேலைப்பளு அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு உங்கள் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று தெரிவித்தவர், பார்த்திபன் இயக்கும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் அந்த பதிவை தொடர்ந்து தனது டுவிட்டரில் பார்த்திபன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், பழகுதல் காதலால் விலகுதலும் காதலால் ஆதலால், ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம். இறுதிவரை வரும் படத்திலும் இருவரும் இணைவோம் என நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவரிடமிருந்து வந்த மிருது மெயில் என்று பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.