மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் போஸ்டரில், கையில் துப்பாக்கியுடன் வாயில் சிகரெட்டை வைத்திருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார் விஜய். இதற்கு பாமக.,வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் அவர் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும் மாணவர்களும் பார்க்கிறார்கள். அவர் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவர்களும் அந்த பழக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத்தான் சொல்கிறது. எனவே நடிகர் விஜய் கடந்த 2007, 2012ம் ஆண்டுகளில் உறுதி அளித்ததை போலவே திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
மேலும், நேற்று நடிகர் விஜய் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதற்காக அவர் இரண்டு கோடி செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் ஆகியோரின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்று மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கை தருகிறது. மாணவ மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவும் விஜய் அவர்கள் பேசும்போது, அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்ற சமூக நீதி தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். என்று அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவு போட்டு உள்ளார்.