2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி 'பீனிக்ஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்தபடம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் 'நடு செண்டர்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். கூடைப்பந்து விளையாட்டு களத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர் வருகிற 20ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
சூர்யா விஜய் சேதுபதியுடன், சூர்யா எஸ்.கே, சாரா பிளாக், டெரன்ஸ், முகேஷ், டோம், யஷ்வந்த், சஹானா, மதுவசந்த், ஆர்த்தி, கிஷோர், ஜீவா, நந்தகோபால், தாரா அமலா ஜோசப், சிவம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஷா ஷரத், கலையரசன் மற்றும் எம். சசிகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்தத் தொடர் குறித்து இயக்குநர் நரு நாராயணன் கூறும்போது "ஸ்போர்ட்ஸ் டிராமாவான 'நடு சென்டர்' உயர்நிலைப்பள்ளியின் கூடைப்பந்து அணி சுற்றி மட்டுமே நகரும் கதை கிடையாது. அதையும் தாண்டி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையையும் பேசுகிறது.
தேசிய அளவிலான கூடைப்பந்து வீரரான 17 வயது பிகே, தவறான நடத்தைக்காக உயர்நிலைப் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறான். வன்முறை மற்றும் ஒழுக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மோசமான பள்ளிக்கு பிகே மாற்றப்பட்டு அங்கு பொருந்த போராடுகிறான். அப்போது அவனுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து வைஸ் பிரின்சிபிள் ஊக்குவிக்க அவனது வாழ்வு மாறத் தொடங்குகிறது.
இந்தத் தொடரில் பயிற்சியாளராக சசிகுமார் நடித்திருக்கிறார். இளைஞர்களின் எனர்ஜி, விறுவிறுப்பான கதை சொல்லல் என அனைத்து தரப்பினருக்கும் பிடித்த தொடராக 'நடு சென்டர்' இருக்கும். இத்துடன் விளையாட்டின் பவர், நோக்கம், ஒழுக்கம், தனக்கென அடையாளம் தேடும் தலைமுறையினரின் வாழ்க்கை என அனைத்தும் இதில் இடம்பெறும்" என்றார்.