9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அக்ஷய் குமார் பேசும்போது தன் மகளுக்கு நடந்த சைபர் கிரைம் தாக்குதல் குறித்தும் அதிலிருந்து அவரது மக்கள் தப்பித்தது குறித்தும் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் கூறும்போது, “என்னுடைய மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நபர் அவரை அடிக்கடி உற்சாகப்படுத்துவது போல் பேசி அறிமுகமானார். ஒரு சில நாட்கள் கழித்து திடீரென என் மகளின் நிர்வாண படத்தை அனுப்பும்படி கூறினார். உடனடியாக என் மகள் சுதாரித்துக் கொண்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு இந்த தகவலை தன் அம்மாவிடம் சென்று கூறினார்.
ஏழாவது முதல் பத்தாவது வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை வகுப்பறையில் ஆசிரியர்களும் வீட்டில் பெற்றோரும் ஏற்படுத்த வேண்டும். அப்படி என்றால் தான் பெரும்பாலான பெண் குழந்தைகள் இந்த சைபர் கிரைம் தாக்குதல் ஆகாமல் தப்பிப்பார்கள்” என்று பேசினார்.