பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் |

மதராஸி, காந்தாரா சாப்டர் 1 படங்களுக்கு பிறகு தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தனது அடையாளத்தை ஒரு போலி நபர் தவறாக பயன்படுத்துவது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணை பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போலவே போலியாக பேசி மக்களை தொடர்பு கொண்டு வருகிறார். ஆனால் இந்த மொபைல் எண் என்னுடையது அல்ல. அதனால் அதிலிருந்து என் பெயரை பயன்படுத்தி வரும் அழைப்புகளும் செய்திகளும் போலியானவை. தயவு செய்து யாரும் பதிலளிக்கவோ அல்லது அத்தகைய தகவல் தொடர்புகளை ஈடுபடவோ வேண்டாம். இந்த ஆள் மாறாட்டும் சைபர் கிரைம் கீழ் வருவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.