ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
திரைப்படம், கார் பந்தயம் என இரட்டை சவாரி செய்து வருகிறார் நடிகர் அஜித்குமார். ‛அஜித்குமார் ரேஸிங்' என்ற கார் ரேஸ் அணியை உருவாக்கி, போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அஜித் அணி துபாயில் 2ம் இடமும், இத்தாலியில் 3ம் இடமும், பெல்ஜியத்தில் 3ம் இடமும் பிடித்து அசத்தியது. தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் அவரின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி பங்கேற்றது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற ‛கிரென்டிக் 24எச் ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் சீரிஸ் 2025' கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. இந்த வெற்றிக்காக அஜித்துக்கும், அவரது குழுவினருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளையும், தமிழக அரசின் சார்பில் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
உதயநிதியின் பதிவு: நடிகரும், நண்பருமான அஜித்குமார் சாரின் அணி ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழகத்தையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும், அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். அஜித்குமார் ரேஸிங் அணி, டிராக்கில் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ‛‛துணை முதல்வர் உதயநிதி, தமிழக அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழக மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித்குமார் மற்றும் அவரது ரேஸிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
எங்களின் அடுத்த கட்ட பங்கேற்பு, கீழ்காணும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும்:
ஆசியன் லெ மான்ஸ் தொடர்
•டிசம்பர் 13 & 14, 2025 - சேபாங், மலேசியா
•ஜனவரி 31 & பிப்ரவரி 01, 2026 - துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•பிப்ரவரி 07 & 08, 2026 - அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர்
•டிசம்பர் 05 & 06, 2025 - சேபாங், மலேசியா
•ஜனவரி 09 & 10, 2026 - அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•ஜனவரி 17 & 18, 2026 - துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வரவிருக்கும் பங்கேற்புகள் - 2026
•மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர்
•கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர்
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.