'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ | தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? |

விஜய் நடித்த ஜனநாயகன் படம் சென்சார் பிரசனை, கோர்ட் தீர்ப்பு காரணமாக பொங்கலுக்கு வரவில்லை. பட குழுவும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட் பணத்தை திருப்பி அளிக்கின்றனர். ஜனநாயகன் எப்போது ரிலீஸ் என யாருக்கும் தெரியவில்லை. கோர்ட்டு தீர்ப்பு, சென்சார் நடைமுறைகளுக்கு பின்னரே பட ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும் என பட நிறுவனம் நினைக்கிறது.
சரி ஜனநாயகன் பின்வாங்கியதால் ஜனவரி 10ல் ரிலீஸ் ஆகும் பராசக்தி படத்துக்கு பலமா அந்த படத்தின் வசூல் அதிகரிக்குமா என்று விசாரித்தால் ஜனநாயகன் பின் வாங்கியது பராசக்திக்கு ஒரு வகையில் பலம். அந்த படம் கிட்டத்தட்ட சிங்கிளாக வருகிறது. பிரபாசின் தி ராஜா சாப், சிரஞ்சீவி தெலுங்கு படம் என மற்ற இரு படங்கள் மட்டுமே வருகின்றன. இதனால் பராசக்தி படத்திற்கு அதிக எண்ணிக்கையில் தியேட்டர் கிடைக்கும்.
ஜனநாயகனுடன் போட்டி பஞ்சாயத்து என எதுவும் இல்லை, ஆனால் வசூல் ரீதியாக படம் வெற்றி பெறுமா என்பது படத்தின் கதை கமர்சியல் விஷயங்களை பொறுத்தே அமையும். எவ்வளவு தியேட்டர் போட்டாலும் படத்தின் கதை சரியில்லை என்றால் மக்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லை என்றால் அந்த படம் ஓடுவது கடினம். இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பல படங்கள் இப்படி ஆகிவிட்டன.
நடிகர்கள், பேனர், இயக்குனர் தியேட்டர் இதை விட கதைதான் முக்கியம் என்கிறார்கள். அதேசமயம் விஜய் ரசிகர்கள் பராசக்திக்கு எதிராக சோசியல் மீடியாவில் பொங்குவது அந்த படத்துக்கு ஒரு வகையில் பாதிப்பு தான். விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் வராததால் பராசக்தியை பார்ப்பார்கள் என்பதை உறுதியாக சொல்லி விட முடியாது என்கிறார்கள்.