ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தனது 16வது படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். 'உப்பென்னா' படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கவுள்ளார். சுகுமார் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார். கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.