ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். வுண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ‛‛3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, காக்கிச்சட்டை, மாரி'' உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார். தான் நடித்த படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் தனுஷ் தயாரித்து வந்தார். இடையில் சில காலம் தயாரிப்பை விட்டு ஒதுங்கி இருந்தவர்.
இப்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். இதை மாரி செல்வராஜ் இயக்குகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கர்ணன் என்ற வெற்றி படம் வெளியானது. தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து படம் பண்ணுகிறார்கள். தனுஷ் தயாரிப்பதோடு, ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் 15வது படமாக இந்தப்படம் உருவாகிறது. தனுஷ், மாரி செல்வராஜ் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக உள்ளனர். அதை முடித்த பின் இவர்கள் இணைந்து படம் பண்ண உள்ளனர். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் தனுஷ்.