காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
அசுரன், ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்த தமிழ், ‛டாணாக்காரன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விக்ரம் பிரபு நாயகனாக நடித்தார். முக்கிய வேடங்களில் அஞ்சலி நாயர், லால், போஸ் வெங்கட் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடித்தனர். டிரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
போலீஸ் தொடர்பான கதை என்றாலும் வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வேறு மாதிரியான கதையில் வெளியானது. அதாவது போலீஸ் பயிற்சியில் நடக்கும் விஷயங்களை கதைக்களமாக கொண்டு இந்தபடம் எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த வருடம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவு பெற்றதால் இயக்குனர் தமிழ் தனது டுவிட்டர் பக்கத்தில்; டாணாக்காரன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. வெற்றிக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வதில் பெருமை கொள்கிறோம் நன்றி,‛‛ என பதிவிட்டிருந்தார்.