காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
இசை என்றாலே இளையராஜா என்று சொல்லும் அளவிற்கு இந்திய சினிமாவில் இசை ராஜாங்கம் நடத்தி வந்தவர், வருபவர் இசைஞானி இளையராஜா. கால மாற்றத்தால் தேவா, ஏ.ஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என புதுப்புது இசையமைப்பாளர்கள் வரவு அதிகரித்ததால் இவருடைய பட வாய்ப்புகளின் எண்ணிக்கை ஒரு கட்டத்தில் குறைந்தது. என்றாலும் தற்போது மீண்டும் முன்பைப்போல பத்துக்கு மேற்பட்ட படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் இளையராஜா. அவரது இசையில் வெற்றிமாறன் டைரக்ஷனில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் வரும் மார்ச் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
அதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கு, தமிழில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். வரும் மே 12ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமாக ஹிந்தியில் தற்போது அவர் இசையமைத்துள்ள மியூசிக் ஸ்கூல் என்கிற படமும் அதே தேதியில் தான் ரிலீஸ் ஆக இருக்கிறது. பப்பா ராவ் பில்லாயி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகள், தங்களது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்த சமூகத்தால் எந்த விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதையும் இசை மூலமாக அவர்கள் அதிலிருந்து எப்படி தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள் என்பதையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி உள்ளது.