இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாராவுக்கு அடுத்து தற்போது மிகப்பெரிய அளவில், சொல்லப்போனால் இரண்டாவது இடத்தில் இருக்கும் நடிகை என்று சமந்தாவை சொல்லலாம். தற்போது அவர் நடிப்பில் புராண படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான குணசேகர் இயக்கியுள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சமந்தாவும் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சமமான ஊதியம் கொடுக்க வேண்டும் என்கிற விவாதம் எழுந்துள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “நிச்சயமாக நானும் அதற்காக போராடத்தான் போகிறேன். ஆனால் என்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் வெற்றிகளால், உங்களுக்கு நாங்களே இந்த அளவு ஊதியம் கொடுக்கிறோம் என அவர்களாகவே முன்வந்து கொடுக்கும்படி செய்வேனே தவிர, யாரிடமும் சென்று எனக்கு சரிசமமாக சம்பளம் கொடுங்கள் என்று கெஞ்ச மாட்டேன்” என்று நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்