ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நாக சைதன்யா. தற்போது தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' படத்தில் நடித்து முடித்துள்ளார். நாக சைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், நான்கு வருடங்கள் கழித்து 2021ல் இருவரும் பிரிந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலிப்பதாகத் தகவல் பரவியது. இருவரும் லண்டனில் இருந்த போது சில புகைப்படங்கள் வெளியானது. ஆனால், அந்தப் புகைப்படம் உண்மையல்ல என்றும் கருத்துக்கள் பரவியது. அது பற்றிய செய்திகள் பரவ சமந்தா தான் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினார். அப்படி ஒரு சர்ச்சை எழுந்ததும் காட்டமாக ஒரு பதிவு செய்திருந்தார் சமந்தா. அதன்பிறகு அந்த சர்ச்சை அடங்கியிருந்தது.
இந்நிலையில் லண்டனில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் சுரேந்தர் மோகன் என்ற 'செப்' நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். பின்னணியில் ஷோபிதா துலிபலா உட்கார்ந்திருப்பது போட்டோவில் தெளிவாகத் தெரிந்தது.
நாக சைதன்யா, ஷோபிதா இருவரும் தங்களது காதலைப் பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது என ரசிகர்கள் அந்தப் பதிவில் கமெண்ட் செய்திருந்தனர். ஆனால், சுரேந்தர் மோகன் அந்தப் பதிவையே நீக்கிவிட்டார். இருந்தாலும், அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்தில் ஷோபிதா துலிபலாவுக்கு நிறைய காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது. இன்று படத்தின் இசை வெளியீட்டில் ஷோபிதா கலந்து கெள்ளவும் வாய்ப்புள்ளது.