டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! | இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறவர் ஜெயலட்சுமி. கடந்த மாதம் இவர் மீது பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஜெயலட்சுமி நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி தவறான வழியில் பணம் சம்பாதிக்கிறார். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலட்சுமி அளித்த பதில் புகாரில், சினேகம் என்ற அறக்கட்டளையை நான் நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறேன். இதற்கும் சினேகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்றே என்னை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் புகார் அளித்துள்ளார். போலி புகார் மூலம் என்னை புண்படுத்திய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இருதரப்பிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காவல் ஆணையர் அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகை ஜெயலட்சுமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சினேகன் நடத்தி வரும் அறக்கட்டளை பெயரில் நான் மோசடி செய்ததாக ஆதாரமற்ற புகார் அளித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் எனது தரப்பு விளக்கங்களை விசாரணை அதிகாரியிடம் அளித்துள்ளேன். சினேகன் புகார் அளித்து விட்டு அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சினேகனுடன் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்துகின்றனர். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசிய சினேகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சினேகன் மீது நீதிமன்றத்தில் மனநஷ்ட வழக்கு தொடர்வேன். இவ்வாறு ஜெயலட்சுமி கூறினார்.