எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது |
இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகர்களை தமிழுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு வில்லன் நடிகராக சென்றவர் தியாகராஜன்.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து அவர் ஆக்ஷன் படங்களில்தான் நடித்தார். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், எரிமலை, ராஜா யுவராஜா, முரட்டுக் கரங்கள் என ஆக்ஷனில் அதகளம் செய்து கொண்டிருந்தார்.
இப்படியான நேரத்தில்தான் மலையாளத்தில் வெளியான 'நியூ டெல்லி' படத்தில் வில்லனாக அறிமுகமானார். உடம்பு முழுவதும் சங்கிலியால் கட்டி திகார் சிறையில் தியாகராஜனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே பொறி பறக்கும். ஹீரோ மம்முட்டிக்கு கூட அப்படியொரு அறிமுகம் இல்லை. 'சேலம் விஷ்ணு' என்ற தமிழ் பேசும் கிரிமினலாக இதில் அவர் நடித்தார்.
படம் பெரிய வெற்றி பெறவே அதனை 'தெலுங்கில் 'அந்திம தீர்ப்பு' என்ற பெயரிலும், ஹிந்தி, கன்னடத்தில் 'நியூ டெல்லி' என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். இந்த மூன்று ரீமேக்கிலும் நடித்த ஒரே நடிகர் தியாகராஜன் மட்டுமே. சேலம் விஷ்ணு கேரக்டரில் அவர்தான் நடித்தார்.
அதன்பிறகு 1990ம் ஆண்டு 'சேலம் விஷ்ணு' என்ற பெயரில் அவரே ஒரு படத்தை இயக்கி நடித்தார். இந்த வருடம்தான் அவரது மகன் நடிகர் பிரசாந்த் 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் அறிமுகமானார்.