பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவில் 'டூரிஸ்ட் பேமிலி' படத்திற்குப் பிறகு 50 கோடி வசூலைக் கடந்த படங்களாக கடந்த இரண்டு மாதங்களில் எதுவுமே அமையவில்லை. இனி வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்களில் சில முக்கிய படங்கள் வசூலைக் குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ஹிந்தியில் 'ஹவுஸ்புல் 5, சிதாரே ஜமீன் பர்' ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன. தெலுங்கில் 'குபேரா, ஹிட் 3' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன.
இந்தியத் திரைப்படங்களுக்கு இணையாக கடந்த இரண்டு மாதங்களில் சில ஹாலிவுட் படங்கள் நல்ல வசூலை இங்கு பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெளியான 'எப் 1' படம் 80 கோடிக்கும் அதிகமான வசூலையும், ஜூலை 1ம் தேதி வெளியான 'ஜூராசிக் வேர்ல்டு', படம் 100 கோடியை நெருங்கும் வசூலையும், கடந்த வாரம் ஜூலை 11ல் வெளியான 'சூப்பர் மேன்' படம் 40 கோடி வசூலையும் பெற்றுள்ளன.
இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் 'மிஷன் இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்' படம் 110 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.