பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இன்று ஜூலை 18ம் தேதி 10 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அனைத்துமே சிறிய படங்கள்தான். இவற்றில் எந்தப் படத்திற்கு வரவேற்பு இருக்கிறது என்பது விரைவில் தெரிந்துவிடும். அடுத்த வாரம் ஜூலை 25ம் தேதியும் சில படங்கள் வெளிவரும். அவற்றில் 'தலைவன் தலைவி மற்றும் மாரீசன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் தான் போட்டி இருக்கவே வாய்ப்புள்ளது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் 'தலைவன் தலைவி'. விஜய் சேதுபதி, நித்யா மேனன் என நடிப்பில் திறமைசாலிகளான இருவரும் இணைந்துள்ள முதல் படம். கணவன், மனைவிக்கு இடையிலான உறவு பற்றி சொல்லும் குடும்பப் படம் இது. இந்தப் படம் வந்த பிறகு விவகாரத்து பெறலாம் என நினைப்பவர்கள் யோசிப்பார்கள் என படக்குழு ஏற்கெனவே கூறியுள்ளார்கள். விஜய் சேதுபதி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஏஸ்' படம் சரியாகப் போகாததால் அவருக்கும் இந்தப் படத்தின் வெற்றி முக்கியமாகி உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' படமும் வெற்றி பெறவில்லை. எனவே, அவருக்கும் இந்தப் படத்தின் வெற்றி மிக முக்கியமானது.
அதே நாளில் வர உள்ள மற்றுமொரு முக்கியமான படம் 'மாரீசன்'. பஹத் பாசில், வடிவேலு இருவரும் 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள். அதுவே இந்தப் படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இருவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டாம். 'மாமன்னன்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தது போலவே இந்தப் படத்திலும் நடித்துள்ளார் வடிவேலு.
தமிழில் 2009ல் வெளிவந்த 'ஆறு மனமே' மலையாளத்தில் 2014ல் வெளிவந்த 'வில்லாளி வீரன்' படத்தை இயக்கிய சுதீஷ் சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். பரபரப்பான ஒரு பயணக் கதையாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்களுமே குடும்பத்துடன் பார்க்கும்படியான படங்களாகத்தான் இருக்கும் என்பதை அதன் டிரைலர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் சினிமாவில் இல்லாத வெற்றியை இந்தப் படங்கள் கொடுக்குமா என்பதற்கு இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.