சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா |
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 5 முதல் 8 தமிழ் திரைப்படங்கள் வெளிவந்தாலும் அதற்கு இடையில் ஹாலிவுட் படங்களும் வெளியாகி சத்தமே இல்லாமல் வசூலை குவித்து வருகிறது. கடந்த வாரம் வெளியான 'ஜூராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்' இப்போது வரை வசூலை எடுத்து வருகிறது.
இந்த வாரம் அதாவது வருகிற 11ம் தேதி 'சூப்பர்மேன்' படம் வெளிவருகிறது. 3டி மற்றும் ஐமேக் தொழில்நுட்பத்தில் தமிழிலும் வெளியாகிறது. மார்வெல் நிறுவனத்தின் டி.சி.யின் முதன்மையான கதாபாத்திரமாக இருப்பது சூப்பர்மேன் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரம் 1938-ம் ஆண்டு வெளியான காமிக்ஸ் புத்தகத்தில்தான் முதன்முறையாக இடம்பெற்றது.
அதன் பின்னர் சூப்பர்மேன் கதாபாத்திரம், கார்ட்டூன், தொலைக்காட்சி தொடர், வெப் சீரிஸ், வீடியோ கேம், திரைப்படங்கள் என்று பல பரிணாமங்களைப் பெற்றது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் இதுவரை பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
தற்போது வெளியாக உள்ள படத்தில் டேவிட் கரன்ஸ்வெட் சூப்பர் மேனாக நடித்திருக்கிறார். அவரை எதிர்க்கும் லெக்ஸ் லூதர் கதாபாத்திரத்தில், நிகோலஸ் ஹோல்ட் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கி இருக்கிறார், ஜேம்ஸ் கன். இந்த படம் பல பாகங்களாக வெளிவர இருப்பதாகவும், தற்போது வெளியாவது இதன் முதல் பாகம் என்றும் கூறப்படுகிறது.
லண்டனில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்று, ஷார்ட். இந்தக் கட்டிடத்தின் மீது, சூப்பர்மேன் சிற்பத்தை பிரமாண்டமான முறையில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அது பார்ப்பதற்கு இரண்டு கோபுரத்தின் நடுவில் சூப்பர்மேன் விண்ணில் பறந்தபடி நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 50 கிலோ மீட்டர் தூரத்தில் நின்றும் இதனை பார்க்க முடியும் என்கிறார்கள்.