அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் | மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் | தமிழில் ஹீரோவான இலங்கை ராப் பாடகர் | இயக்குனரான ராகவ் ரங்கநாதன் | சத்தமின்றி வெளியான 'தண்டர்போல்ட்ஸ்' | குடும்ப ரகசியத்தை காக்கும் கவுண்டமணி |
மலையாள திரையுலகில் நடிகர்கள் அவ்வப்போது இயக்குனராக மாறி வருகிறார்கள். இதற்கு முன்பு பிரித்விராஜ், அடுத்து மோகன்லால் ஆகியோர் தங்களுக்குள் இருந்த படைப்பாளிக்கு இயக்குனர் உருவம் கொடுத்து படங்களை இயக்கி விட்டார்கள். அந்த பட்டியலில் அடுத்ததாக இணைகிறார் மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவே இவர் நடிக்கும் படங்கள் 100 கோடி வசூல் கிளப்பில் எளிதாக இணைந்து வருகின்றன. அதுமட்டுமல்ல தனது படங்களை தானே தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான 'மார்கோ' திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் தானும் இயக்குனராக போவதாக அறிவித்துள்ள உன்னி முகுந்தன், ஒரு சூப்பர் ஹீரோ கதையம்சத்துடன் களத்தில் இறங்குகிறார், சூப்பர் ஹீரோவுக்கான கட்டு மஸ்தான உடல் தோற்றம் கொண்டவர் தான் உன்னி முகுந்தன்.
இதற்கு முன்பு மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மின்னல் முரளி' என்கிற சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட படம் வெளியானது. அதேசமயம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, “காமிக்ஸ் கதைகளில் படித்த அல்லது புராணங்களில் கேள்விபபட்டுள்ள, அவ்வளவு ஏன் என்னுடைய கனவில் கூட அடிக்கடி தோன்றியுள்ள சூப்பர் மேன் எப்படி இருப்பார் என்று ஒரு கற்பனை செய்து வைத்திருக்கிறேன் அதற்கு இந்த படத்தில் உருவம் கொடுக்கப் போகிறேன்” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.