மனைவியை இழந்து கலங்கி நிற்கும் கவுண்டமணி : இரங்கல் கூட தெரிவிக்காத நடிகர்கள் | டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு வரவேற்பு : அதிகரிக்கும் தியேட்டர்கள் | வேலை நாட்களில் ஏமாற்றமடையும் ரெட்ரோ | குழந்தைகளை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி: வேதிகா | கணவன் மனைவி நடித்த யுகம் | தமிழில் ஹீரோவான இலங்கை ராப் பாடகர் | இயக்குனரான ராகவ் ரங்கநாதன் | சத்தமின்றி வெளியான 'தண்டர்போல்ட்ஸ்' | குடும்ப ரகசியத்தை காக்கும் கவுண்டமணி | பிளாஷ்பேக்: மஞ்சுளாவுடன் நடிக்க 5 வருட ஒப்பந்தம் போட்ட எம்ஜிஆர் |
மலையாளத்தில் 'குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி' என மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் இயக்குனர் பசில் ஜோசப். இதில் மின்னல் முரளி திரைப்படம் இவரை பாலிவுட் வரை பேச வைத்தது. அதே சமயம் நட்புக்காக சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் காமெடியாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக மாறி டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதையின் நாயகனாகவே இவர் படங்களை தேர்வு செய்தாலும் பல படங்களில் வில்லத்தனம் கலந்த நடிப்பை கொடுத்து ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அது மட்டுமல்ல,
கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் அதிக அளவு படங்களில் நடித்த ஹீரோ என்றால் இவராகத்தான் இருக்கும்.. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் இவருக்கு 'மேன் ஆப் தி இயர்' என்கிற விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போது எவ்வளவோ போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் வீக்லி ஸ்டார் (வெள்ளிக்கிழமை நாயகன்) என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.