அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான 'சூப்பர்மேன்' கடந்த 11ம் தேதி வெளியானது. தற்போது இந்த படம் நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சூப்பர் மேனாக டேவிட் கோரன்ஸ்வெட், வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகியாக லூயிஸ் லேன் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பாலிவுட் நடிகை ஷ்ரேயா தன்வந்திரியும் நடித்துள்ளார்.
இந்தியாவில் இந்த படம் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தணிக்கை செய்த குழுவினர் படத்தில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயா தன்வந்திரி நடித்திருந்த முத்தக் காட்சிகளை நீக்கி விட்டனர்.
இதுகுறித்து ஷ்ரேயா தன்வந்திரி தணிக்கை குழுவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் 33 வினாடிகள் ஓடக்கூடிய எனது முத்தக்காட்சியைத் தணிக்கை குழு நீக்கியுள்ளது முட்டாள்தனமானது. விரும்புவதைப் பார்த்து ரசிக்கக்கூட ரசிகர்களுக்கு உரிமை கிடையாதா? இப்படி செய்வது அநியாயம். வயதான நடிகர்கள், இளம் நடிகைகளுடன் காதல் செய்யலாம். ஆனால் நடிகைகள் வயதாகிவிட்டால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்தப்போக்கு சினிமாவில் மாறவேண்டும். என்கிறார்.