மற்ற மொழிகளில் 50 கோடி வசூலித்த 'லோகா' | 25 வருடங்களை நிறைவு செய்த 'ரிதம்' | செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் |
ஹிந்தியில் வெளியான எம்.எஸ்.தோனி அண்ட்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் கியாரா அத்வானி. பின்னர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பாரத் அனே நேனு, ராம்சரண் உடன் வினைய விதேயே ராமா படங்களில் நடித்தவர், அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்து வந்தபோதே தனது காதலரான பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கியாரா. அதையடுத்து கர்ப்பமாக இருந்து வந்த அவருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த செய்தி வெளியானதை அடுத்து சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி தம்பதிக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.