இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
2010ம் ஆண்டு வெளியான படம் மதராசபட்டினம். ஏ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் ஆங்கிலேயர் காலத்து கதை. அதனால் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க லண்டனின் இருந்து அழைத்து வரப்பட்ட மாடல் அழகி மற்றும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் எமி ஜாக்சன். ஆங்கிலேயே பெண் என்பதால் இந்த ஒரு படத்துடன் லண்டனுக்கே திரும்பி சென்று விடுவார் என்று கருதப்பட்ட நிலையில் அடுத்த படமே பாலிவுட் படமாக அமைந்தது. அந்த படம் ஏக் தீவானா தா. அதன் பிறகு பாலிவுட்டில் பிசியான நடிகை ஆனார். ஆங்கிலேயே பெண்ணாக இருந்தாலும் ஓரளவுக்கு தென்னிந்திய பெண்ணின் சாயல் இருந்ததால் தாண்டவம், தெறி, தங்கமகன், கெத்து, தேவி படங்களில் நடித்தார். கடைசியாக 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடித்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம்.
அதன்பிறகு லண்டனுக்கு சென்றவர் திரும்பவே இல்லை. அங்கு காதலுடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி ஒரு குழந்தைக்கு தாயும் ஆனார். இப்போது அந்த காதலனையும் கழற்றி விட்டுவிட்டு புதிய காதலனோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவரை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வருகிறார். மதராசபட்டினத்திற்கு முதன் முதலாக அழைத்து வந்த அதே ஏ.எல்.விஜய், அவர் அடுத்து இயக்கும் படத்தில் எமிதான் நாயகி. அருண் விஜய் நாயகனான நடிக்கிறார். விரைவில் இதுபற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.