வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான படம் 'கூலி'. நேற்றுடன் இப்படம் 25வது நாளைத் தொட்டுள்ளது. செப்டம்பர் 11ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் குறைந்த தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கும்.
இப்படத்திற்கான வசூல் அறிவிப்பு 404 கோடி என நான்காம் நாளில் வந்ததோடு அப்படியே நிற்கிறது. 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். அது 600 கோடியைக் கடந்துள்ளதா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. படக்குழுவினர் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நிறைவு வசூலையாவது அவர்கள் அறிவிப்பார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
25வது நாள் போஸ்டர்களில் படத்தில் இடம் பெற்ற ரஜினியின் பிளாஷ்பேக் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளனர். 80களில் ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியான போஸ்டராக அது இருந்தது.