போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தலைவி படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான அதிரடி ஆக் ஷன் படம் ‛மிஷன் சாப்டர் 1'. இந்த படத்திற்கு பின் விஜய்யின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஏ.எல்.விஜய். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு 'லைட்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே மாதவன், கங்கனா நடிப்பில் தனு வெட்ஸ் மனு என்ற ஹிந்தி படம் வெளியானது. அதேப்போல் விஜய் இயக்கிய தலைவி படத்தில் கங்கனா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.