படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு |
கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது.
ரூ.400 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் புஷ்பா 2ம் பாகம் உருவாகி வருகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன், சுகுமார் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்காலிகமாக இப்படத்தை நிறுத்தி வைத்தனர் என செய்தி பரவியது. ஆனால் அது உண்மையல்ல. சமீபத்தில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புஷ்பா முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா ' என்கிற பாடலுக்கு சமந்தா நடனமாடி உலகளவில் இந்த பாடல் வைரலானது. இதே போல் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளது. முதலில் இந்த பாடலில் நடனம் ஆட ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆட தற்போது அனிமல் படத்தின் மூலமாக பிரபலமான த்ரிப்தி டிம்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவர் சம்பள தொகை அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லையாம். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அன்று திரைக்கு வருவதைத்யொட்டி இதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.