இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதையடுத்து துணிவு, வேட்டையன் படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில், அசுரன் படத்தில் நடிக்க தனுஷ் அழைத்தார். வெற்றிமாறன் சொன்ன கதை பிடித்ததால் அப்படத்தில் நடித்தேன். அதன் பிறகு அஜித்துடன் துணிவு படத்தில் நடிக்க வேண்டும் என்று எச்.வினோத் அழைத்த போது மிகவும் ஆர்வத்துடன் நடித்தேன். இந்த படங்களை தொடர்ந்து தன்னுடைய படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஞானவேல் அழைத்தார். ஏற்கனவே அவர் இயக்கிய ஜெய்பீம் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதனால் உடனடியாக அவர் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தேன். அந்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று அவர் சொன்ன போது மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே ரஜினி, அஜித், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை ஒரு மிகப் பெரிய பம்பர் பரிசாக கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.