பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் கூட்டணி இணைந்த 'ஆர்ஆர்ஆர்' படம் பெரும் வெற்றி பெற்று 1000 கோடி வசூலைப் பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் இந்தப் படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த படங்களில், தங்களது ஓடிடி தளத்தில் 45 மில்லியன் மணி நேரப் பார்வைகளை இந்தப் படம் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாக நெட்பிளிக்ஸ் தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர்கள், ஓடிடி தளம் என இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்து ஒரு படத்தை உருவாக்க பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆர்ஆர்ஆர்' படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
எல்லாம் கூடி வந்தால் ராஜமவுலி - மகேஷ்பாபு கூட்டணி இணைய உள்ள படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் இந்த 'ஆர்ஆர்ஆர்' கூட்டணியின் அடுத்த படம் உருவாகலாம் என்கிறார்கள்.