இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
மலையாளத்தில் அறிமுகமாகி தமிழுக்கு வந்து வெற்றி பெற்று தெலுங்கிலும் தனி முத்திரை பதித்தவர் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான 'மகாநடி' தெலுங்கு படத்திற்ககாக 2018ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
அதன் பிறகு கீர்த்தி தமிழில் நடித்து வெளிந்த படங்களில் 'சர்க்கார்' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. “சீமராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, பெண்குயின், அண்ணாத்த” ஆகிய தமிழ்ப் படங்களும், “மிஸ் இந்தியா, ரங்தே” ஆகிய தெலுங்குப் படங்களும் அவருக்குப் பெயர் சொல்லும் அளவிற்கு அமையவில்லை. மலையாளத்தில் வெளிவந்த 'மரைக்காயர்' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார்.
தெலுங்கில் கீர்த்தி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'குட்லக் சகி' படம் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளத்தில் டீசரை மட்டும் வெளியிட்டார்கள். ஆனால், தெலுங்கில் மட்டுமே இன்று படத்தை வெளியிட்டுள்ளார்கள்.இப்படத்தின் மூலம் தன்னுடைய குட்லக்கை மீண்டும் மீட்டெடுப்பாரா கீர்த்தி என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், படத்திற்கு முதலில் வரும் விமர்சனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.
தமிழில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சாணி காயிதம்' விரைவில் ஓடிடி வெளியீடாக வரும் எனத் தெரிகிறது. தெலுங்கில் சிரஞ்சிவியுடன் 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான 'போலா சங்கர்' படத்திலும், மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'வாஷி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.