ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இயக்குனர் பிரியதர்சன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் தனது தாயைப் போல நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தார். கடந்த சில வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வந்த கல்யாணி தற்போது பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த நவ-26ல் தமிழில் சிம்புவுடன் நடித்த மாநாடு, டிசம்பர் 3ல் மோகன்லாலின் மரைக்காயர், ஜன-21ல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஹிருதயம், தற்பொழுது ஜன- 24ல் பிரித்விராஜ் ஜோடியாக நடித்த ப்ரோ டாடி என கடந்த 2 மாதங்களில் மட்டும் கல்யாணி நடித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி உள்ளது.
இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல தற்போது வெளியான ஹிருதயம் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடிடியில் வெளியான ப்ரோ டாடி படத்திலும் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது. அந்த வகையில் முன்னணி நடிகையாக மாறும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.