விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் இடவேள பாபு. இவர் கடந்த மாதம் வரை மலையாள நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் பொறுப்பு வைத்து வந்தார். கடந்த மாதம் இவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல் துறையில் புகார்கள் அளிக்க தொடங்கினர்.
அதில் நடிகர் இடைவேள பாபு உள்ளிட்ட சில நடிகர்கள் மீது நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இது குறித்த விசாரணைக்கு அவரை வரவழைத்த போலீசார் அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த போலீசார் அதன் பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.