ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
கடந்த வருடம் மலையாளத்தில் தி கேரளா ஸ்டோரி என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி ஹிந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது.
மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் கேரளாவில் வெளியாகி மலையாள திரையுலகையே ஒரு உலுக்கு உலுக்கிய நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களை மையப்படுத்தி உருவாகிறது என சோசியல் மீடியாவில் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. இந்த படத்தின் இயக்குனர் சுதீப்தோ சென் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தியை பார்த்துவிட்டு நானும் தயாரிப்பாளர் விபுல்ஷாவும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்று கூறியுள்ளார். அதே சமயம் இந்த இரண்டாம் பாகம் எந்த பின்னணியில் உருவாகிறது என்பதை பற்றி அவர் மூச்சுக் கூட விடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.