அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
கேரள திரையுலகத்தையே கடந்த சில நாட்களாக ஹேமா கமிட்டியின் அறிக்கை உலுக்கி எடுத்து வருகிறது. திரையுலகில் காலம், காலமாக பாலியல் கொடுமை நடந்து வருவதாக அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதே ஒட்டுமொத்த அதிர்ச்சிக்கு காரணம். இதன் காரணமாக, மலையாள திரைப்பட சங்கத்தில் (அம்மா) இருந்து மோகன்லால் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மவுனம் காத்த மோகன்லால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறி இருந்தார். குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர்கள் பற்றியும், கேரள சினிமாவின் கருப்பு ரகசியங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்றும் பல விதமாக பேச்சுகள் சமூக வலைதளங்களில் கிளம்பின.
மோகன்லாலின் கருத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று திரையுலகில் பேசப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பிரபல நடிகரான மம்முட்டியும் இந்த விவகாரத்தில் கருத்தை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஹேமா கமிட்டி பரிந்துரைகள், தீர்வுக்கான ஆலோசனைகள் அனைத்தையும் நான் வரவேற்கிறேன். கமிட்டியில் குறிப்பிட்டுள்ளவற்றை கேரள திரையுலகத்தின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
பாலியல் கொடுமை பற்றி எழுப்பப்பட்ட புகார்கள் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விசாரணை நேர்மையாக நடக்கட்டும். கோர்ட்டின் முன் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு என்ன தண்டனை என்பதை கோர்ட்டே அறிவிக்கட்டும். திரையுலகில் அதிகார மையம் என்று எதுவும் கிடையாது. சினிமா என்பது இத்தகைய விஷயங்கள் இருக்கக்கூடிய களம் அல்ல. பரிந்துரைகளை செயல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருந்தால் அவை களையப்பட வேண்டும். ஒட்டு மொத்தத்தில் சினிமா வாழவேண்டும்.
ஒரு பிரச்னை என்று வரும்போது சம்பந்தப்பட்ட அமைப்பு தான் முதலில் கருத்து கூறவேண்டும். அதன் பின்னரே உறுப்பினரான என்னை போன்றோர் கருத்துகள் தெரிவிக்கவேண்டும். அதனால் தான் இதுவரை காத்திருந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஜினி கருத்து
இதற்கிடையே, ‛கூலி' படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினியிடம், மலையாள திரையுலகை உலுக்கிவரும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‛‛எனக்குத்தெரியாதுங்க.. அதைப்பற்றி எதுவும் தெரியாதுங்க ஸாரி'' என்றார்.