தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகர்களில் முன்னிலையில் உள்ள மதுரை மண்ணை சேர்ந்தவர், நடிகர் விஜய் விஷ்வா (அபிசரவணன்). இவர் 2012 முதல் 'அட்டக்கத்தி' 'குட்டிபுலி' உள்ளிட்ட படங்களில் சிறு ரோல்களில் நடித்து 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்றார்.
'டூரிங் டாக்கீஸ்', 'சாகசம்', 'பட்டதாரி', 'மாயநதி', படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது 'பிரம்ம முகூர்த்தம்', 'தரைப்படை', 'சாரா', 'பரபரப்பு' படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்புடன், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் துவங்கி, புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு உணவு, உடை வழங்கி உதவுவதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக விருதுகளும் பெற்றுள்ளார். இவரது நடிப்பு 'பிளஸ்' சேவையால் ஈர்க்கப்பட்டு இந்தாண்டு அமெரிக்காவில் தமிழ் சங்கங்களின் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டார்.
அங்கு 'கிராண்ட் மார்ஷல்' கவுரவமும், சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் பெற்று திரும்பியவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...
அமெரிக்க மண்ணில் தமிழ் சங்கங்கள் துடிப்புடன் செயல்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து வி.ஐ.பி.,க்களுக்கு இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். இந்தாண்டு அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. குயின்ஸ் என்.ஒய்., நியூயார்க் தமிழ் சங்க தலைவர் கதிர்வேல் குமாரராஜா, குயின்ஸ் இந்தியா அணிவகுப்பு குழு தலைவர் கோஷி ஓ தாமஸ் சார்பில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள நம் நாட்டின் பல மாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து அந்தந்த மாநில கலாசார துடிப்புடனும், சமூக உணர்வுடனும் விழாவை நடத்தினர். நியூயார்க் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் இந்திய - அமெரிக்க தேசியக்கொடியுடன் காரில் ஊர்வலமாக என்னை அழைத்து சென்று கவுரப்படுத்தியபோது உலகமே என் கையில் இருந்தது போல் உணர்ந்தேன்.
நிகழ்வில் பங்கேற்றதற்காக 'இளம் பாரி' விருதும் வழங்கினர். ஒரு தமிழ் நடிகர் அமெரிக்காவில் ஒரே நேரத்தில் இதுபோல் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றது இதுதான் முதல்முறை. அங்கிருந்த நடிகர் நெப்போலியனும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். என்னை அவரது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். நான் நடித்த மாயநதி படத்தை பார்த்து என்னை பாராட்டியது மறக்க முடியாத தருணம். 30க்கும் மேற்பட்ட தமிழர் சங்கங்கள் அமெரிக்காவில் தமிழ் கலாசாரத்தை இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்த ஆர்வத்துடன் இருப்பதை உணர முடிந்தது. எத்தனை மொழிகள் திணிக்கப்பட்டாலும் எந்த சூழ்நிலையிலும் தமிழ் இளமையாக இருக்கும் என்றார் உற்சாகமாக.