100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் | பிளாஷ்பேக்: 11 வயதில் பின்னணி பாடகியான ஏ.பி.கோமளா | பின்வாங்கிய ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் : அப்போ ராஜமவுலிக்கு வெற்றியா? | ராம் சரண் படத்தில் ஷோபனா? |

‛மருதம்' படத்தில் விதார்த் ஜோடியாக நடிப்பவர் ரக்ஷனா. விவசாயிகள் கஷ்டம், அவர்களின் கடன் பிரச்னை, நில பிரச்னைகளை கதை பேசுகிறது. ராணிப்பேட்டையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. திரைப்படக் கல்லுாரியில் படித்தவரும், மோகன்ராஜா, சாட்டை அன்பழகன் குழுவில் பணியாற்றிவருமான வி.கஜேந்திரன் இயக்கி உள்ளார்.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய விதார்த், 'அம்மாவாக நடிக்க பல ஹீரோயின்கள் தயங்குவார்கள். ரக்ஷனா தைரியமாக ஒப்புக்கொண்டார். சம்மர் காலத்தில் வேலுார் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பு நடந்தது. கேரவன் கிடையாது. படக்குழு ரொம்பவே கஷ்டப்பட்டோம்'' என்றார்.
ஹீரோயின் பேசுகையில், ‛‛விதார்த்தை சீனியர் ஹீரோ என்றார்கள். மற்றவர்கள் அதை குறிப்பிட்டு கலாய்க்க, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, நடிப்பில் எனக்கு சீனியர். அவருக்கு 30 வயதுதான் இருக்கும்'' என்று சமாளித்தார்.
அக்டோபர் 10ல் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தவிர, சாட்டை அன்பழகன் இயக்கும் படம், 2 வெப்சீரிஸ், இன்னொரு படத்திலும் விதார்த் நடிக்கிறாராம்.




