படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

விதார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'மருதம்'. கஜேந்திரன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். மார்கழி திங்கள் படத்தில் அறிமுகமான ரக்ஷனா நாயகியாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, 'தினந்தோறும்' நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். என்.ஆர்.ரகுந்தன் இசை அமைக்கிறார். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி விதார்த் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக 'மருதம்' இருக்கும். ராணிப்பேட்டைப் பகுதியை மையப்படுத்திய கதை. அதனால மொத்தப் படப்பிடிப்பும் அங்கேதான் நடந்தது.
தங்குவதற்கு ஒரு நல்ல இடவசதிகூட கிடையாது. வாகனங்கள் செல்ல முடியாத ஏரியாக்களும் உண்டு. கேரவன் வசதிகூட இருக்காது. கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த பகுதி விவசாயிகள் படும் துன்பத்தை விட இதுஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
இந்தக் கதையில் விவசாயியாக நடித்தேன். தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த பிறகு அதிலிருந்து மீண்டு வர முடிந்ததா என்பதுதான் கதை. வலிகள் நிறைந்த கதை. விவசாயிகளுக்கு ஏற்படும் எத்தனையோ பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதுவரை பேசப்படாத ஒரு புதிய பிரச்னையாக இருக்கும். நிறைய விவாதங்களை ஏற்படுத்தும். என்றார்.