துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
அரூர் பிரைவேட் லிமிடெட் சார்பில் வெங்கடேசன் தயாரிக்கும் படம் 'மருதம் '. வி.கஜேந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் கதை நாயகனாக விதார்த் நடித்துள்ளார். ரக்ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்ஆர் ரகு நந்தன் இசையமைத்துள்ளார்
படம் பற்றி இயக்குனர் கஜேந்திரன் கூறும்போது "விவசாயின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள படம் “மருதம்”. விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில், நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடையிலான உறவு தான், மற்ற அனைத்து உறவுகளை விடவும் முதன்மையானது. இன்றைய காலகட்டத்தில் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சனைகளை, கைவிட்டுப்போகும் அவனது நிலத்திற்கும் அவனுக்குமான உறவை, சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது" என்றார்.