துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
தமிழ் சினிமாவின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருப்பூரை சேர்ந்த டி.எம் ஜெயமுருகன் 1995ல் 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முரளி நடித்த ‛ரோஜா மலரே' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கினார். தனது படம் உட்பட ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார்.
ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது உடல். இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.