2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் |
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினி, அடுத்து ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் ஜெயிலர் 2 படத்தின் அறிமுக டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த வீடியோவில், ரஜினிகாந்த் நடிக்கவே இல்லை. டூப்பை பயன்படுத்தி எடுத்துள்ளார்கள். ஒரேயொரு சாட்டில் மட்டுமே ரஜினி நடித்துள்ளார் என்பது போன்று சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் அறிமுக டீசருக்கான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் டூப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க ரஜினியே நடித்துள்ளார் என்பதற்கான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.