ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' |

தென்னிந்திய நடிகர் சங்க புதுக்கட்டடம் இந்த ஆண்டுக்குள் திறக்கப்படும் என்று தெரிகிறது. நடிகர் சங்க கடனை அடைத்து, சங்கத்தை மீட்ட விஜயகாந்த்தை பெயரை நடிகர் சங்க கட்டடத்துக்கு வைக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்த நிலையில், சமீபத்தில் கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விஜயகாந்த் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
என்னதான் பிரச்னை என்று விசாரித்தால், சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க இடம் கிட்டத்தட்ட 200 கோடி மதிப்புள்ளது. 40 கோடி செலவில் புதுக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நடிகர் சங்கத்தின் பெயரை மாற்ற முடியாது. காரணம் பல ஆண்டுகளாக தென்னிந்திய நடிகர் சங்க பெயரே ஆவணங்களில் இருக்கிறது. அதை அவ்வளவு எளிதில் மாற்றமுடியாது. ஆகவே, நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க முடியாது.
நடிகர் சங்க கலையரங்கத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததுபோது, பழைய நடிகர் சங்க வளாகத்தில் இருந்த கலையரங்கத்துக்கு சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம் என்றே பெயர் இருந்தது. புது கட்டடத்தில் உருவாகும் கலையரங்கத்துக்கும் அதே பெயரே இருக்கட்டும். அதை மாற்ற வேண்டாம். நாடகத்துறைக்கு அவ்வளவு பணிகள் செய்தவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புது கட்டடத்தில் திருமணமண்டபம், ஹால், வேறு சில பணிகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றிக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வாய்ப்பு. இது குறித்து முடிவெடுக்க நிர்வாகிகளுக்கு பொதுக்குழு அதிகாரம் வழங்கியுள்ளது. மேலும் புதுக்கட்டடம் அமைய துணை முதல்வர் உதயநிதி அதிகம் உதவி இருப்பதால், ஒரு இடத்துக்கு கலைஞர் பெயர், சிவகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிக நிதி கொடுத்து இருப்பதால் அவர் பெயரும் ஒரு பகுதிக்கு சூட்ட வாய்ப்பு என்கிறார்கள்.