லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
கடந்த ஜூலை மாதம் இறுதியில் கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் உயிர் பலியும் சேதமும் ஏற்பட்டது. அதற்கு முன்னதாகவே கடந்த ஜூலை 16 ம் தேதி கர்நாடக மாநிலம் ஷிரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த சமயம் பெல்காமிலிருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு ஓட்டி வந்த அர்ஜுன் என்கிற டிரைவர் லாரியுடன் அந்த நிலச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் 72 நாட்கள் கழித்து நேற்று கர்நாடகாவில் கெங்கவல்லி பகுதியில் லாரியில் இருந்த அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அவரது குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை கர்நாடக அரசு செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள திரையுலக நட்சத்திரங்களான மோகன்லால், மம்முட்டி, மஞ்சு வாரியர் ஆகியோரும் அர்ஜுனின் மறைவு குறித்து உருக்கமாக தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து மம்முட்டி வெளியிட்டுள்ள பதிவில், “அர்ஜுன் எப்படியாவது திரும்பி வந்து விடுவார் என நாங்கள் காத்திருந்தோம். ஆனால் இன்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
மோகன்லால் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “உனக்காக நாங்கள் எல்லோரும் தொடர்ந்து பிரார்த்தித்தோம். எங்கள் அனைவரின் அன்பிற்கு உரியவனாகவும் நீ மாறினாய். அன்பு சகோதரா உனக்கு என் இறுதி அஞ்சலி” என்று கூறியுள்ளார்.
அர்ஜுனின் சடலம் கைப்பற்ற செய்தி அறிந்து முதல் ஆளாக தனது இரங்கலை வெளிப்படுத்திய நடிகை மஞ்சு வாரியர் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “குறைந்தபட்சம் உன்னை தகனம் செய்து எரிப்பதற்காகவாவது உன்னை திரும்ப பெற்றோமே. ஒரு கைப்பிடி சாம்பல் உன்னை நினைவூட்டி கொண்டிருக்கும். அன்பு அர்ஜுன்.. மலையாளிகளின் இதயங்களில் நீ எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாய்” என்று கூறியுள்ளார்.