விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பாலிவுட் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரன்வீர் சிங். 15 வருடங்களாக பாலிவுட்டில் நடித்து வரும் இவர் கடந்த 2018ல் நடிகை தீபிகா படுகோனை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி படம் என எதுவும் அமையவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த நவம்பரில் வெளியான 'சிங்கம் அகைன்' திரைப்படம் கூட இவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது 'துரந்தர்' என்கிற படத்தில் நடித்த வருகிறார் ரன்வீர் சிங்.
இந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை தான் பதிவிட்டிருந்த அனைத்து பதிவுகளையும் புகைப்படங்களையும் மொத்தமாக நீக்கியுள்ளார் ரன்வீர் சிங். அது மட்டுமல்ல தனது புரொபைல் படத்தையும் முழு கருப்பு நிறத்திற்கு மாற்றியதுடன் அதில் 12:12 என்கிற எண்ணையும் குறுக்காக வைக்கப்பட்ட இரண்டு கத்திகளையும் கொண்ட ஒரு கருப்பு நிற போஸ்டரையும் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த திடீர் செயல் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவருக்கும் அவரது மனைவி தீபிகா படுகோனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்று சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியான நிலையில் இப்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்துள்ளது ரசிகர்களிடம் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதை கமென்ட்டில் நிறைய பார்க்க முடிகிறது.
அதே சமயம் இன்னும் சிலரோ அவர் தற்போது நடித்து வரும் துரந்தர் என்கிற படத்திற்கான புரமோஷனின் ஒரு பகுதியாக இப்படி ஏதோ செய்கிறார் என்றும் அந்த 12:12 என்கிற எண்கள் படம் சம்பந்தமான ஒரு விஷயத்தை குறிக்கின்றது என்றும் கூறியுள்ளார்கள். அவர்கள் சொன்னது போலவே இந்தப்படத்தில் ரன்வீர் சிங்கின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று 12:12 மணிக்கு வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இதற்காக ஏன் தனது பதிவுகள் அனைத்தையும் அவர் நீக்கினார் என்பதற்கு தான் ரசிகர்களுக்கு விடை கிடைக்க வேண்டும்.