ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! |

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த மகளுக்கு துவா என்று பெயர் வைத்தார்கள். இப்போது வரை தங்களது மகளின் முகத்தை அவர்கள் ரசிகர்களுக்கு காட்டவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கள் மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கொண்டாடி உள்ளார்கள். மகளின் இந்த பிறந்த நாளுக்காக தானே கேக் தயாரித்துள்ளார் தீபிகா படுகோனே. அதையடுத்து மகளுக்கு தாங்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்ந்து தெரிவித்து கொள்கிறார்கள். என்றாலும் இந்த பிறந்தநாளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் அவர்கள் தங்களது மகளின் முகத்தை காட்டவில்லை.