தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு |
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். ஆனால் தந்தையைப் போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக மாறி பே***ட்ஸ் ஆப் பாலிவுட் என்கிற படத்தையும் இயக்கி முடித்து விட்டார். விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. ஏற்கனவே யூகமாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தில் சல்மான் கான், ரன்வீர் சிங் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோட்டத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க பாலிவுட் சினிமா பின்னணியில் உருவாகியுள்ள இதில், புதிதாக பாலிவுட்டுக்கு வரும் ஒரு இளைஞன் எப்படி அங்கு இருக்கும் ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு தனக்கென ஒரு இடத்தை அடைவதற்கு முயற்சிக்கிறான் என்பதை நகைச்சுவை மற்றும் காதல் கலந்து இந்த படத்தில் சொல்லி இருக்கிறாராம் ஆர்யன் கான்.