புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கல்யாண சீஸன் களைகட்டும் இந்த தருணத்தில், அக்டோபர் மாதம் முழுவதும் மெகா திருமண வைபவம் மூலம் முக்கிய திருமண நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர ஜீ தமிழ் தயாராகியுள்ளது. இனி ஒவ்வொரு ஞாயிறும் ஜீ தமிழில், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை, புதுப்புது அர்த்தங்கள், மற்றும் நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட தொடர்களின் முன்னணி ஜோடிகளின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருமணக் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நிகழவுள்ளன. மேலும், பிளாக்பஸ்டர் மற்றும் நேரடித் தொலைக்காட்சி வெளியீடு திரைப்படங்கள் என இந்த மாதம் கோலாகலமாகத் துவங்கவுள்ளது.
திருமண கொண்டாட்டங்களை துவங்கும் விதமாக அக்டோபர் 3-ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, நினைத்தாலே இனிக்கும் தொடரின் இரண்டரை மணிநேர கல்யாண ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எதிரும் புதிருமான ஜோடியான சித்தார்த் மற்றும் பொம்மி இடையே உருவாகும் எதிர்பாராத பிரச்சினைகள் அவர்களை நெருக்கமாக்குவதை இந்த பகுதியில் காணலாம்.
இது மட்டுமல்ல! தொலைக்காட்சிகளில் நேரடி வெளியீடாக வெற்றி துரைசாமியின் என்றாவது ஒருநாள் திரைப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விதார்த், ரம்யா நம்பீசன், இளவரசு மற்றும் மாஸ்டர் ராகவன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் கதை - தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை முக்கியமாகக் கருதும் ஒரு விவசாயக் குடும்பத்தினை சுற்றி நகர்கிறது.அக்குடும்பத்தின் அங்கமாக அவர்கள் கருதும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படுகையில், அவற்றை காக்க அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்கிற உணர்வு போராட்டங்களை இப்படம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளது.