வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் |
தமிழ் டிவி உலகில் பிரபலமான தொகுப்பாளினி மணிமேகலை. தனியார் மியூசிக் சேனலில் முதன் முதலில் அறிமுகமாகி, பின் விஜய் டிவி பக்கம் தாவி அங்கு மிகவும் பிரபலமானவர். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக தனது தனித் திறமையால் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தவர். மற்ற ஆண் கோமாளிகளுக்கு இணையாக நல்ல பேரை வாங்கிய பெண் கோமாளியாகவும் இருந்தார்.
நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசனில் தொகுப்பாளராகப் பணியாற்றினார் மணிமேகலை. நிகழ்ச்சி முடிவடைய சில வாரங்கள் இருந்த நிலையில் அந்நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக வெளியேறினார். அதன் காரணம் என்ன என்பதைத் தெரிவித்து வீடியோவையும் பதிவிட்டிருந்தார். கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய பிரியங்கா தேஷ்பாண்டே, மணிமேகலையின் தொகுப்பாளர் பணிகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பின் வேறு எந்த டிவி பக்கமும் போகாமல் இருந்தார் மணிமேகலை. தற்போது ஜீ தமிழ் டிவியில் நுழைந்துள்ளார். 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' தொகுப்பாளராக மாறியிருக்கிறார். அது குறித்த தகவலையும், சில புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.