புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' |
பாடகராக, குழந்தை நட்சத்திரமாக இருந்த பூவையார் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛ராம் அப்துல்லா ஆண்டனி'. ஜெயவேல் இயக்கி உள்ளார். இந்த படம் குறித்து பூவையார் பேசுகையில் '' 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார்.
இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு எல்லாமே. நான் பாடிக்கொண்டே இருப்பேன். கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என் அம்மாவை நினைத்து பார்க்கிறேன். அவர் என் குழந்தையாக அடுத்து பிறக்க வேண்டும். நான் அவர் மகனாக எப்போதும் பிறக்க வேண்டும்' என்றார்.